குவைத்தில் தந்தை பெரியார் நூலகம் சார்பில்‌‌ தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா..!

periyar library behalf Tamil New Year and pongal festival was held in Kuwait.

குவைத் நாட்டில், தந்தை பெரியார் நூலகம் சார்பில், தமிழ் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் விழா கடந்த (17-01-2020) அன்று சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், ச.மணிவாசகம் (மதிமுக குவைத்) அவர்கள் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் நூலகத்தின் காப்பாளர் ச.செல்லப்பெருமாள் அவர்கள்
வரவேற்புரை நிகழ்த்தினார்.

மேலும்,‌ இவ்விழாவில் அருள்செல்வம் (திராவிடர் கழகம் குவைத்) மற்றும் நாசர் சலாஹுதீன் (ஏ1 அடையார் உணவகம் குவைத்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கவிஞர். இந்துமதி பக்கிரிசாமி (திரைப்படப் பாடலாசிரியர்) அவர்கள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இதில், முக்கிய நிகழ்வாக இரா.சித்தார்த்தன் (திராவிடர் கழகம் குவைத்) அவர்கள் “உழவர் திருநாள்” என்ற தலைப்பிலும், ஆலஞ்சியார் (அவைத்தலைவர், குவைத் பன்னாட்டு திமுக) அவர்கள் “தமிழ் இலக்கியங்களில் பெண்கள்” என்ற தலைப்பிலும், க.மீ.அன்பரசன் (செயலாளர், உலகப் பண்பாட்டு மய்யம் ஹிஷிகி. குவைத் கிளை) அவர்கள் “திராவிட இயக்கமும் தமிழ் புத்தாண்டும்” என்ற தலைப்பிலும், சத்திரமனை அசன் முகமது (தலைவர், கூடல்நகர் தோழமை குழுமம்) அவர்கள் “ஏன் கொண்டாடுகிறோம் தமிழ் புத்தாண்டு” என்ற தலைப்பிலும், முஹம்மது நாசர் (துணைப் பொருளாளர், குவைத் தமிழ் இஸ்லாமிய சங்கம்) அவர்கள் “தமிழ் மொழி வளர்ச்சியில் இஸ்லாமியர்களின் பங்கு” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள்.

மேலும், இவ்விழாவில் பல்வேறு அமைப்பினர் மற்றும் கட்சியினர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

குவைத் பன்னாட்டு திமுகவின் முதன்மை செயலாளர் ந.தியாகராஜன் அவர்கள் விழாவை தொகுத்து வழங்கினார். இறுதியாக குவைத் பன்னாட்டு திமுகவின் மக்கள் தொடர்பு துறை செயலாளர் ஜெ.எஸ்.முஸ்தபா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.