குவைத்தில் வர்த்தக (Commercial) விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெறுகிறது – DGCA

state Min. reassures about preparations for resuming commercial flights. (photo : Q8india.com)

குவைத்தில் அடுத்த மாதம் வர்த்தக (Commercial) விமானங்களை மீண்டும் தொடங்க சிவில் ஏவியேஷன் டைரக்டர் ஜெனரல் (DGCA) மேற்கொண்ட தயாரிப்புகளை சேவை விவகார அமைச்சர் மற்றும் தேசிய சட்டமன்ற விவகார அமைச்சர் முபாரக் அல் ஹரிஸ் அவர்கள் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DGCA அதிகாரிகள் குவைத் செய்தி நிறுவனத்திடம் (KUNA) அளித்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், குவைத் சர்வதேச விமான நிலையத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அனைத்து முனையங்களிலும் பயணிகளுக்கு தேவையான உயர்தர சேவைகளை வழங்குவதன் முக்கியத்துவத்தையும், சுகாதாரத் தரங்களுக்கு ஏற்ப பாதுகாப்பான செயல்பாடுகளை உறுதி செய்வதையும் அல்-ஹரிஸ் வலியுறுத்தினார்.

சுகாதார அதிகாரிகள் வழங்கிய அனைத்து பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08