குவைத்தில் ஃபர்வானியா பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 6 பேர் கைது..!!

six expats arrested for breaking curfew in kuwait.

மனிதவளத்திற்கான பொது அதிகாரசபையின் பிரதிநிதி முஹம்மது தஹாம் அல்-தஃபிரி அவர்கள் அமைச்சரவையின் முடிவுகளை மீறி ஊரடங்கு உத்தரவின் போது ஃபர்வானியா பகுதியில் திறந்திருந்த சலவை நிலையத்தை மூடியதாக தெரிவித்துள்ளார்.

அங்கு மொத்தமாக 6 வெளிநாட்டவர்கள் பணிபுரிந்து வருவதாகவும், அதில் தனியார் துறையில் இருவரும் மற்றும் 4 பேர் வீட்டுப்பணியாளர்களாக பணிபுரிந்து வருவதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கைகளை எடுக்குமாறு ஃபர்வானியா காவல் நிலைய அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.