குவைத்தின் Mahaboula பகுதியில் வெளிநாட்டினர் கூட்டம்; எச்சரிக்கை செய்தும் கலைந்துச் செல்லாததால் வானத்தை நோக்கி அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு..!!

Security disperse crowd of expats in mahboula. (photo : Arab Times)

குவைத்தின் Mahaboula பகுதி தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக முழு ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு வளையத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பொதுமன்னிப்பு பயன்படுத்தி தாயகம் செல்ல வேண்டும் என்று 100ற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸ் பாதுகாப்பு பொது இடைவெளி எதுவும் இன்றி கூட்டமாக முற்றுகையிட்டுக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அதிகாரிகள் எவ்வளவு கூறியும் அவர்கள் கலைந்து செல்லாததால், அவர்களை அங்கிருந்த விரட்டுவதற்கு பாதுகாப்பு அதிகாரி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

இந்த பிரச்சினை தொடர்பாக அங்கிருந்த நபர்களில் 8 பேர் வரையில் ஊரடங்கு உத்தரவு மீறிய உள்ளிட்ட காரணங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.