குவைத்தில் வங்கி ஊழியர்ப் போன்று பேசி வதந்திகிளப்பியவருக்கு வலைவீச்சு..!!

RUMORMONGER INSTILLS FRIGHT AND LURES THEM TO WITHDRAW MONEY FROM THEIR BANK ACCOUNTS.

குற்றவியல் புலனாய்வுத் துறை (CID) மற்றும் சைபர் கிரைம் இணைந்து குவைத் மொழியில் பேசும் அடையாளம் தெரியாத நபர், வங்கி ஊழியர்ப் போன்று பேசி, மக்கள் தங்கள் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்கும்படி அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மக்களிடையே அச்சத்தை உண்டாக்கி அவர்களின் வங்கிக் கணக்குகளிலிருந்து பணத்தை எடுக்கும்படி அவர் கூறியதாக கூறப்படுகிறது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள இந்த கிளிப் குவைத்துக்குள் இருந்து வெளியிடப்பட்டிருக்கலாம் என்றும், அந்த நபர் விரைவாக கைது செய்யப்படுவார் என்றும் குற்றவியல் புலனாய்வுத் துறைத் தெரிவித்துள்ளது.

மேலும், வங்கியின் பெயரை சேதப்படுத்தியதற்காக குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ய வேண்டும் என்று ஆடியோ பதிவில் பெயர் குறிப்பிடப்பட்ட வங்கி நிர்வாகம் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.