குவைத்திற்கு வரும் பயணிகளின் கவனத்திற்கு..!!

Rules for arriving passengers in kuwait. (image credit : New Indian express)

குவைத்தில் ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் குவைத் சர்வதேச விமான நிலையத்தில் வணிக (commercial) விமானங்களை மறுதொடக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக விமானங்கள் மறுதொடக்கம் செய்யும்போது கண்டிப்பாக PCR சான்றிதழைக் கொண்டு வர வேண்டும் என்றும், மேலும் நாட்டிற்குள் நுழைந்த தேதியிலிருந்து 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலின் இருக்க வேண்டியிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் பின்பற்றப்படும் என்று உறுதிமொழி கையெழுத்திடப்பட வேண்டும் என்று தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

COVID-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகமூடிகள், கையுறைகள் போன்றவற்றை அணிந்து இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அனைத்து பயணிகளுக்கும் வெப்பநிலை சரிபார்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms