குவைத்தில் நாளை முதல் உணவகங்களுக்குள் அமர்ந்து சாப்பிட அனுமதி; கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன ?

Restaurants set to serve customers from Tuesday
Restaurants set to serve customers from Tuesday. (image credit : IIK)

குவைத்தில் நாளை (ஆகஸ்ட் 18) செவ்வாய்க்கிழமை முதல் உணவகங்களுக்குள் வாடிக்கையாளர்களை அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதற்காக உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் முழுமையாக துப்புரவு மற்றும் ஸ்டெர்லைஸ் செய்து தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்களின்படி, உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் விதிமுறைகளுக்கு கட்டுப்பட வேண்டும், அதாவது இருக்கைகளுக்கு இடையிலான இடைவெளி இரண்டு மீட்டருக்கும் குறையாது இருக்க வேண்டும்.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

உணவகம் அல்லது கபேக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் வெப்பநிலை சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், 37.5 டிகிரி வெப்பநிலைக்கு மேல் உள்ளவர்கள் உணவகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் அமைந்துள்ள இடங்களில், குறிப்பாக நுழைவாயில்களிலும், காசாளர்களுக்கு அருகிலும் சானிடைசேர் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூக்காவின் பயன்பாடு உணவகத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது மற்றும் அனைத்து உணவகங்களும் ஒரு நாளைக்கு இரண்டு முறை சுத்தம் செய்யப்பட வேண்டும் என்று அறிவுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

வாடிக்கையாளருக்கு தட்டு, ஸ்பூன், முட்கரண்டி போன்ற பாத்திரங்களை ரெஸ்ட்ரான்ஸ்ட் பயன்படுத்த முடியாது, ஒன் யூஸ் பாத்திரங்களில் டிஷ் பரிமாற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாப்பாட்டு வைக்கும் டேபிளில் நாப்கின்கள் மற்றும் மசாலாப் பொருட்களை வைத்திருக்க அனுமதி இல்லை, மேலும் கோரிக்கையின் பேரில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms