குவைத்தில் உணவகங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி..!!

Restaurants allowed to open 24 hours
Restaurants allowed to open 24 hours. (image credit : IIK)

குவைத்தில் உணவகங்களை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக குவைத் நகராட்சி இயக்குனர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

குவைத்தில் சுகாதாரத் தேவைகளை அமல்படுத்துவதற்கான அமைச்சரவைக் குழு, படிப்படியாக இயல்புநிலைக்குத் திரும்புவதற்கான கட்டமைப்பிற்குள், ஐந்து புதிய முடிவுகளை எடுத்துள்ளது என்று அல் ராய் தினசரி தெரிவித்துள்ளது.

கொரோவைரஸ் தொற்றுநோய்க்கு முன்னர் இருந்த செயல்பாட்டுத் தரத்தின்படி, உணவகங்கள், கடைகள் மற்றும் சில நடவடிக்கைகளை மீண்டும் திறக்க குழு முடிவு செய்துள்ளதாக குவைத் நகராட்சியின் இயக்குநர் ஜெனரல் Ahmad Al-Manfouhi அவர்கள் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தின் ஜிலீப் அல் ஷுயோக் பகுதியில் வெளிநாட்டை சேர்ந்த தாய் மற்றும் மகள் கொலை..!!

மேலும், உணவகங்கள் 24 மணி நேரம் வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மால்கள் மற்றும் வளாகங்களில் மசாஜ் பார்லர்கள் மற்றும் பிரார்த்தனை அறைகளை மீண்டும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தனியார் வீட்டுப் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் நள்ளிரவு 12:00 மணிக்கு மூடப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு கஃபேக்களில் ஹூக்காவை வழங்க இன்னும் அனுமதிக்கப்படவில்லை என்று Al-Manfouhi அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : வளைகுடா நாடுகளில் புகையிலை நுகர்வு விகிதங்கள் அதிகம் உள்ள நாடு குவைத் : சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

அதே நேரத்தில் விளையாட்டு கல்விக்கூடங்களை மீண்டும் தொடங்குவது குறித்து இன்னும் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், சுகாதாரத் தேவைகளுக்கு இணங்காதவர்களுக்கு, குறிப்பாக முகக்கவசங்கள் அணியாதவர்களுக்கு அபராதம் மற்றும் பிற தண்டனை நடவடிக்கைகளை விதிக்கும் வரைவு சட்டத்தை அரசாங்கம் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளுக்கு புதிய பதிவு சேவை தொடக்கம் – MOI

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms