குவைத்தில் குடியிருப்பு மாற்றம் மற்றும் வாகன உரிமை மாற்றம் போன்ற சேவைகள் ஜூன் 30 முதல் தொடங்கும் – MOI

Residency transfer, Vehicle ownership transfer from Tuesday. (photo : Arab Times)

குவைத்தில் படிப்படியாக இயல்பு வாழ்க்கைக்கு பாதுகாப்பாக திரும்புவது குறித்து அமைச்சர்கள் சபைக்கு இணங்க, உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) முதல் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை பணிக்குத் திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்தவும் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை பராமரிக்கவும் உள்துறை அமைச்சகத்தால் அதிகளவிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை முதல் அமைச்சக அலுவலகங்களில் முதல் முறையாக குடியிருப்பு மற்றும் ஒரு ஸ்பான்சரிடமிருந்து இன்னொருவருக்கு குடியிருப்பை மாற்றுவது போன்ற நடைமுறைகள் நடத்தப்படும் என்று MoI தெரிவித்தது.

ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிமங்களை வழங்குதல், வாகன புதுப்பித்தல், வாகன உரிமையை மாற்றுவது மற்றும் போக்குவரத்து மீறல்களுக்கு அபராதம் செலுத்துதல் ஆகியவற்றை அலுவலகங்களில் செய்யலாம் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அனைத்து சேவைகளுக்கும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) முதல் www.moi.gov.kw வலைத்தளம் மூலம் ஆன்லைனில் முன்பதிவு செய்வதன் மூலம் முன் அப்பாயின்மென்ட் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சகங்களுக்கு வருகை தரும் எவரும் சுகாதார வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், அமைச்சக அலுவலகங்களுக்கு வருகை தரும் போது முகமூடி அணிந்து சமூக தூரத்தை பராமரிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08