குவைத்தில் ஒவ்வொரு நாளும் 1000திற்கும் மேலான வெளிநாட்டவர்களின் குடியிருப்புகள் காலாவதி..!!

Residency of 1000s of expats expiring every day. (image credit : IIK)

குவைத்தில் உள்ள வெளிநாட்டை சேர்ந்தவர்கள் நாட்டிற்கு வெளியே இருப்பதாலும் மற்றும் ஆதரவாளர்கள் (sponsor) ஆன்லைனில் அவர்களின் குடியிருப்பை புதுப்பிக்க தவறியதாலும், ஒவ்வொரு நாளும் 1000திற்கும் மேலான வெளிநாட்டவர்களின் குடியிருப்புகள் காலாவதியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து, வெளிநாட்டவர் நாட்டிற்கு வெளியே இருந்தாலும் குடியிருப்பை புதுப்பிக்க உள்துறை அமைச்சகம் ஆன்லைனில் வசதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விமான நிலையம் மூடப்பட்டதால் ஏராளமான நிறுவனங்கள் இந்த ஆன்லைன் வசதியைப் பயன்படுத்தி குவைத்துக்கு வெளியே சிக்கித் தவிக்கும் தொழிலாளர்களின் குடியிருப்பை புதுப்பித்து வருகின்றனர்.

இருப்பினும், சில ஸ்பான்சர்கள் தங்கள் தொழிலாளர்களின் குடியிருப்பை புதுப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், செல்லுபடியாகும் குடியிருப்பு உள்ள வெளிநாட்டவர்களுக்கு நாட்டிற்கு திரும்பி வருவதற்கான கால அவகாசம் நடப்பு ஆண்டின் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms