குவைத்தில் சிவில் ஐடி (civil id) புதுப்பிக்க தற்போது ஆன்லைன் வசதி..!!

Renew your civil id in online in kuwait. (photo : Arab Times)

குவைத் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர்கள் தங்களது சிவில் ஐடியை (Civil ID) “ஆன்லைன்” மூலம் புதுப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1889988 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலமும் சிவில் ஐடியை புதுப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை அமைச்சர்களின் முடிவுகளின்படி, இந்த மாதத்தின் 26ஆம் தேதிக்குப் பிறகு சிவில் ஐடி வழங்கும் பணி மீண்டும் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.