KRCS குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு முகக்கவசங்கள் மற்றும் ஸ்டெர்லைசர்களை விநியோகம்..!!

Red Crescent Society distributed masks and sterilizers to passengers at Kuwait Airport. (image credit : IIK)

குவைத்தில் கொரோனா வைரஸை (COVID-19) எதிர்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) குவைத் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு முகக்கவசங்கள் மற்றும் ஸ்டெர்லைசர்களை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்ப்பு..!!

KRCS சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹா அல்-பர்ஜாஸ், பயணிகளுக்கு சேவை செய்வதற்கான சமூக முயற்சிகளில் சங்கம் தொடர்கிறது என்றும், குவைத் சர்வதேச விமான நிலைய பிரதான முனையம், T4 மற்றும் அல் ஜசீரா முனையத்தில் சங்கத்தில் தன்னார்வலர்கள் இருப்பதைக் குறிப்பிட்டார்.

புறப்படும் பயணிகளுக்கு முக்கவசங்கள், ஸ்டெர்லைசர்கள் மற்றும் கையுறைகள் விநியோகிக்கப்பட்டன என்று அல்-பர்ஜாஸ் கூறினார், இது தொடர்பாக தடுப்பு சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை; வேலையிழக்கும் ஆபத்து..!!

முன்னதாக, சங்கம் வைரஸ் நெருக்கடியின் தொடக்கத்தில் பல அரசு நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்களுக்கு முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் ஸ்டெர்லைசர்களை வழங்கியது மற்றும் பல மாநில நிறுவனங்களில் பணியாளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு முகக்கவசங்களை விநியோகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!

அல்-பர்ஜாஸ் தன்னார்வலர்களின் முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, (கொரோனா) நெருக்கடியின் தொடக்கத்திலிருந்து தடுப்பு சுகாதாரப் பொருட்களை விநியோகிப்பதில் அவர்களின் குறிப்பிடத்தக்க பங்கைப் பாராட்டினார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms