குவைத்தின் ஜஹ்ரா பகுதியில் KRCS உணவு பொட்டலங்கள் விநியோகம்..!!

Red Crescent Society distributed food kits to workers in Jahra. (photo : IIK)

குவைத் உள்துறை அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) நேற்று (ஜூல்ட் 18) சனிக்கிழமை அன்று ஜஹ்ரா கவர்னரேட்டில் உள்ள தொழில்துறை மண்டலத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு 500 உணவு பொட்டலங்கள் மற்றும் 500 பால் அட்டைப்பெட்டிகளை விநியோகித்தது.

KRCS-ல் உள்ள பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை இயக்குனர், யூசெப் அல்-மராஜ் அவர்கள் விநியோக செயல்முறையின் ஒரு பக்கமாக, குவைத்தில் பரவி வரும் கொரோனா வைரஸை (COVID-19) எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த சமூகம் முன்னர் ஜிலீப் ஷுவைக், கைதன், அல்-ஃபரவனியா, அல்-ஜஹ்ரா, சபா அல்-சலீம் மற்றும் ஹவல்லி உள்ளிட்ட பல பகுதிகளில் விநியோகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சர்க்கரை, தேநீர், எண்ணெய், பாஸ்தா, ஊட்டச்சத்து டின்கள், டுனா, தக்காளி பேஸ்ட், மாவு, உப்பு போன்ற அடிப்படை தேவைகளில் இந்த உணவு பொட்டலங்களில் உள்ளது என்று அல் மராஜ் தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms