குவைத்தில் கொரோனா வைரஸ் குறித்த அண்மை (ஜூன் 9) நிலவரம்..!!

Recent covid-19 updates in kuwait. (photo : Opindia)

வைரஸ் குணம் குறித்த விவரம் :

கொரோனா வைரஸிலிருந்து மேலும் 920 நபர்கள் குணமடைந்துள்ளதாக குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பாஸல் அல்-சபா அவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

தற்போது, குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,162ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இரண்டு நாட்களுக்குள் அவர்கள் மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்கள் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வைரஸ் பாதிப்பு மற்றும் இறப்பு குறித்த விவரம் :

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 630 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் மொத்தமாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 33,140ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4 பேர் கொரோனா வைரஸால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தற்போதுவரை, 22,162 பேர் குணமாகியுள்ளதாகவும் மற்ற 10,705 பேர் சிகிச்சைப்பெற்று வருவதாகவும் மற்றும் 273 பேர் மரணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.