குவைத் நாட்டிற்கு மூன்று மில்லியன் டன் LNG எரிவாயு வழங்க கத்தார் முடிவு…

Khaled Al-Fadhel and Saad Sherida Al-Kaabi during signing of an agreement to supply LNG gas.(image source:Reuters news)

குவைத் நாட்டிற்கு ஆண்டுக்கு 3 மில்லியன் டன் வரை LNG(liquefied natural gas) எரிவாயு வழங்க 15 ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக கத்தார் பெட்ரோலியம் (Q.P) ஜனவரி 5, ஞாயிற்றுக்கிழமை அன்று அறிவித்துள்ளது.

குவைத்தின் வளர்ந்து வரும் எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலும், குறிப்பாக மின் உற்பத்தித் துறையில் பூர்த்தி செய்ய உதவும் வகையில் குவைத்தின் அல்-ஸோர் துறைமுகத்திற்கு வந்து சேரும் எரிவாயுக்கள் 2022 ஆம் ஆண்டில் தொடங்கும் என்று குவைத் பெட்ரோலியம் கார்ப் (KPC) உடனான கூட்டு அறிக்கையில் QP தெரிவித்துள்ளது.

உலகின் சிறந்த L.N.G சப்ளையரான கத்தார், 2027-க்குள் ஆண்டிற்கு 126 மில்லியன் டன்களாக உற்பத்தியை (M.T.P.A) அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

இந்த ஒப்பத்ததின் மூலம் குவைத் அதன் தேவையை பூர்த்தி செய்ய உதவும், மேலும் உள்ளூர் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கு உதவும் என்று குவைத்தின் ஆயில் மினிஸ்டர் கலீத் அல்-ஃபதேல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும், “உள்ளூர் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிப்பதற்காக KPC செயல்பட்டு வரும் நிலையில், இயற்கை எரிவாயு விநியோகத்தின் இறக்குமதியைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது” என்று ஃபதேல் தெரிவித்துள்ளார்.

குவைத் மின்சக்தி தேவையை பூர்த்தி செய்ய எரிவாயு இறக்குமதியை அதிகரித்து வருகிறது, குறிப்பாக கோடையில் ஏர் கண்டிஷனிங் அமைப்புகளின் நுகர்வு கடுமையாக அதிகரிக்கும் நிலை உள்ளதால் இறக்குமதியை அதிகரித்து வருகிறது, ​​ஆனால் இது அதன் 2040 வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக எரிவாயு உற்பத்தி உள்ளதால் அதன் அதிகரிப்பதிலும் கவனம் செலுத்திவருகிறது.