குவைத் ஏவியேஷன் ஷோவில் கத்தார் ஏர்வேஸ் பங்கேற்பு…

Qatar Airways Participates in the Kuwait Aviation Show 2020.(image source:BW Hotelier)

குவைத் ஏவியேஷன் ஷோ 2020-ல் கத்தார் ஏர்வேஸ் பங்கேற்கப்போவதாக அறிவித்துள்ளது, அதில் அதன் அதிநவீன A350-1000 ஏற்பஸுடன் பல விருதுகளை பெற்ற பிசினஸ் கிளாஸ் இருக்கை, Qsuite, அதி நவீன தனியார் ஜெட் gulfstream G500 போன்றவை கத்தார் கடற்படையிலிருந்து பொருத்தப்படும்.

ஜனவரி 15 முதல் 18 வரை நடைபெறும் இந்த குவைத் ஏவியேஷன் ஷோ 2020 ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்களின் ஆதரவில் நடைபெறுகிறது.

குவைத் ஏவியேஷன் ஷோ 2020-ல் சர்வதேச விமான நிறுவனங்கள் தங்களின் சமீபத்திய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வெளிப்படுத்த இது ஒரு முக்கியமான தளமாகும். இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள், 15,000 வர்த்தக பார்வையாளர்கள், 60,000 பொது பார்வையாளர்கள் மற்றும் 60 விமானங்கள் காட்சிக்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கத்தார் மற்றும் குவைத் அனைத்து துறைகளிலும் வலுவான உறவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் பெற்றுவருகிறது. தோஹாவிற்கும் குவைத் நகரத்திற்கும் இடையிலான எங்கள் விமானங்களுக்கான தேவை தொடர்ந்து வளர்ந்து வருகிறது, இப்போது ஹமாத் சர்வதேச விமான நிலையம் மற்றும் குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு இடையே வாரந்தோறும் 168 விமானங்களை இயக்குகின்றன. குவைத்தைச் சேர்ந்த பயணிகளுக்கு தோஹா வழியாக விமானங்களில் உலகளவில் 160க்கும் மேற்பட்ட இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது.

பல விருதுகளை பெற்ற விமான நிறுவனமான கத்தார் ஏர்வேஸ், Skytrax நிர்வகிக்கப்படும் 2019 ஆண்டிற்கான உலக விமான விருதுகளால் ‘உலகின் சிறந்த விமான நிறுவனம்’ என்று பெயரிடப்பட்டது. மேலும், இது ‘மத்திய கிழக்கில் சிறந்த விமான நிறுவனம்’, ‘உலகின் சிறந்த பிஸ்னஸ் வகுப்பு விமானம்’, மற்றும் ‘சிறந்த பிஸ்னஸ் வகுப்பு இருக்கை’ போன்ற பல பெருமைகளை பெற்றுள்ளது. ஐந்து முறை விமானத் துறையில் சிறந்து விளங்குவதால் ‘ஆண்டின் சிறந்த Skytrax ஏர்லைன்ஸ்’ என்ற தலைப்பைபெற்ற ஒரே விமான நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.