குவைத்தில் நிர்வாணமாக ஜாகிங் செய்தவர் கைது….!

A syrian man arrested in kuwait. (Image credit : agency)

சிரியா நாட்டைச் சேர்ந்த நபர் நிர்வாணமாக ஜாகிங் செய்வதைக் கண்ட குவைத் போலிசார் அவரை கைது செய்துள்ளதாக குவைத் செய்தித்தாளான “அல் ராய்” ஞாயிற்றுக்கிழமை அன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட அந்த நபர் போலீஸ் காவலில் உள்ளார். மேலும்,பொது ஒழுக்கங்களை மீறியதற்காக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தெருவில் நிர்வாணமாக ஜாகிங் செய்து கொண்டிருந்த ஒரு இளைஞன் குறித்து பாதுகாப்பு அதிகாரிகளிடம் தாக்கல் செய்யப்பட்ட பல அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரையில் கிடந்த அந்த நபர் நீண்ட தூரம் ஜாகிங் செய்து களைத்துப்போயுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர் மருத்துவ சிகிச்சைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அந்த நபரை மீட்ட பின்,அவர் 30 வயதான ஒரு சிரியா நாட்டை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், அவர் குடிபோதையில் இருந்ததால் கீழாடை இல்லாமல் தெருவில் வெளியே சென்றுள்ளார்.

இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள அந்த நபரை பொது ஒழுக்கத்தை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரம் தெரிவிக்கிறது.

மேலும், “அவருக்கு எதிரான சட்ட நடைமுறைகள் இன்னும் நிலுவையில் இருக்கிறது” என்று அந்த வட்டாரம் கூறியுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டுவிட்டால், அவர் குவைத்திலிருந்து வெளியேற்றபடுவார்.