குவைத்தில் பீஸா உணவக நிறுவனத்தின் 3 வீட்டு விநியோக ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ்..!!

pizza company's three Home delivery members infected by coronavirus.

குவைத்தில் பீஸா உணவக நிறுவனத்தின் 3 வீட்டு விநியோக ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சுகாதார அமைச்சகம் Sabah Al Salem மற்றும் Hawally-யில் உள்ள நிறுவனத்தின் கிளைகளை மூட உத்தரவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்கள் Hawally பகுதியில் சுமார் 500 பேர் வசிக்கும் ஒரு கட்டிடத்தில் வசித்துவருகின்றனர், அந்த கட்டிடத்தை முழுமையாக பாதுகாப்பு அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர்கள் பணியாற்றிய வீடுகள் மற்றும் அவர்களது உறவினர்களின் பட்டியலை Agrarian Affairs அமைச்சகம் தயாரித்துள்ளது.

இதேபோன்று, Sharq பகுதியில் இருந்து சுமார் 900 தொழிலாளர்கள் Abdali-யில் உள்ள சுகாதார தடுப்பு மையத்திற்கு மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக சுமார் 22 பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.