பிலிப்பைன்ஸ் நாட்டின் வீட்டு வேலை தொழிலாளிகள் குவைத் நாட்டிற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரபு நாட்டில் ஒரு வேலைக்காரி தனது முதலாளிகளால் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிறகு பிலிப்பைன்ஸ் நாட்டின் வீட்டு வேலை தொழிலாளிகள் குவைத் நாட்டிற்கு செல்ல விதிக்கப்பட்ட தடை வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
ஜீன்லின் வில்லாவெண்டே இறந்ததைத் தொடர்ந்து குவைத்தில் ஏற்கனவே இருக்கும் பிலிப்பினோக்களுக்கும் மற்றும் திறமையான தொழிலாளர்களுக்கும் இந்த தடை விதிவிலக்கு அளிக்கிறது, என்று தொழில் செயலாளர் (Labour secretary) சில்வெஸ்ட்ரே பெல்லோ தடையை அறிவிக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஜீன்லின் வில்லாவெண்டேவின் இறப்பிற்கு நீதி கிடைக்காவிட்டால் இந்த தடை தொடர்ந்து நீடிக்கும் என்று பெல்லோ அவர்கள் குவைத் நாட்டிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், இங்கு தற்போது சுமார் 200,000 பிலிப்பினோக்கள் வாழ்கின்றனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
வில்லாவெண்டேவை பலமுறை தாக்கப்பட்டதாகவும், அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் பிலிப்பைன்ஸ் தூதரகம் தெரிவித்தது.
மேலும், பிரேத பரிசோதனையின் முடிவுகள் இன்னும் நிலுவையில் இருந்ததால் அவரது மரணத்தின் சரியான தேதி தெரியவில்லை, ஆனால் அவரது முதலாளிகள் இந்த வழக்கில் முதன்மை சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.