குவைத்தில் உள்ள மருந்தகங்கள் முகக்கவசங்களை அரசால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் விற்க வேண்டும் – MOH

Pharmacies in Kuwait must sell masks at state-approved price. (photo : IIK)

சுகாதார அமைச்சகம், மருந்தகங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட விலையில் முகக்கவசங்களை விற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

அதாவது, ஒரு முகக்கவசம் 150 fils-ஐ தாண்டக்கூடாது என்று தெரிவித்துள்ளது.

குவைத் செய்தி நிறுவனத்தால் பெறப்பட்ட அறிக்கையில், அமைச்சகத்தின் துணை செயலாளர் Dr. அப்துல்லா அல்-பதுர் அவர்கள் குவைத்தில் முகக்கவசங்கள் அணிய மக்களை ஊக்குவிப்பதற்கான சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களின்படி இந்த முடிவு வந்துள்ளது என்று உறுதிப்படுத்தினார்.

மேலும், முகக்கவசங்களின் விற்பனையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என்று அவர் தெரிவித்தார்.