குவைத்துக்கு வர விரும்பும் பயணிகளுக்கு அரபு PCR சோதனை சான்றிதழ் கட்டாயம்..!!

Passengers wishing to come to Kuwait must provide an Arabic PCR test certificate. (photo : NIE)

குவைத் சுகாதார அமைச்சர் ஷேக் Dr. பசில் அல்-சபா அவர்கள் கூறுகையில், குவைத் மக்களிடையே COVID-19 நோய்த்தொற்றுகள் அதிகரித்ததன் காரணம் சுகாதார அறிவுறுத்தல்களுக்கு இணங்கத் தவறியதாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது சாதாரண வாழ்க்கையை படிப்படியாக மீட்டெடுக்கும் திட்டத்தின் முதல் கட்டத்தை நீட்டிக்க காரணமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

குடும்பக் கூட்டங்கள், உடல் ரீதியான தூரங்கள் மற்றும் சுகாதார விதிகளை கடைபிடிக்க தவறியது ஆகியவை குவைத்தில் வைரஸின் எண்ணிக்கை உயர்வுக்கு பங்களித்ததாக ஷேக் பசில் அவர்கள் தெரிவித்தார்.

குவைத்திற்கு வர விரும்பும் பயணிகள், பயணத்தின் நான்கு நாட்களுக்கு முன்னர் தாங்கள் வைரஸிலிருந்து விடுபட்டவர்கள் என்ற PCR பரிசோதனையை நடத்திய அரபு நகல் சான்றிதழை கட்டாயமாக சமர்ப்பிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08