தொற்றுநோயை எதிர்த்துப் போராட 196 பாகிஸ்தான் மருத்துவ ஊழியர்கள் குவைத் வருகை!

Pakistan medical professionals Kuwait arrived
Pakistan medical professionals Kuwait arrived (PHOTO: AFP)

COVID-19 தொற்றை எதிர்த்துப் போராட குவைத்துக்கு 196 மருத்துவ நிபுணர்களை பாக்கிஸ்தான் அனுப்பியதாக KUNA தெரிவித்துள்ளது.

இந்த கொரோனா வைரஸை எதிர்த்து போராட இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்கும் வகையில், இந்த மருத்துவ நிபுணர்கள் வருகை புரிந்துள்ளனர்.

குவைத்தில் புதியவகை கோவிட் -19 வைரஸ் இதுவரை இல்லை…!

அவர்களில் 41 மருத்துவர்கள், 131 செவிலியர்கள் மற்றும் 24 தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்குவர்.

கடந்த ஜூலை மாதம், குவைத் மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திடபட்டது.

குவைத்துக்கு மருத்துவ உதவி வழங்கிய பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு, பாகிஸ்தானுக்கான குவைத் தூதர் நாசர் அல் முத்தைரி (Nassar Al Mutairi) நன்றி தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு என்பது திடமானது என்றும், பிரிக்க முடியாதது என்றும் சுட்டிக்காட்டினார்.

சர்வதேச விமானச் சேவைகளை மீண்டும் தொடங்க குவைத் முடிவு!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter