குவைத்தில் சிவில் ஐடிகளை வழங்க இரண்டு சிறப்பு அரங்குகளைத் திறக்கிறது PACI..!!

PACI opens two halls to issue civil IDs. (image credit : Arab times)

குவைத் சிவில் தகவலுக்கான பொது அதிகாரசபை (PACI) ஜூலை 5 முதல் தொடங்கி கடந்த இரண்டு வாரங்களில் சுமார் 20,000 சிவில் அடையாள அட்டைகளை விநியோகித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், PACI வேலை நேரத்தை மாலை ஆறு மணி வரை நீடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் முன்பதிவு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன், அட்டைகளின் விநியோகத்தில் கூட்டத்தைத் தவிர்க்க முடிந்ததாக PACI தெரிவித்துள்ளது.

தற்போது, சிவில் அட்டை பெறுவதற்கான நியமனங்களின் எண்ணிக்கையையும் PACI அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் PACI பல்வேறு பரிவர்த்தனைகளுக்கான கூடுதல் மண்டபத்தையும் முதியவர்கள் மற்றும் ஊனமுற்றோருக்கான சிறப்பு கவுண்டர்களையும் திறந்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms