குவைத் சிவில் தகவல் பொது ஆணையம் (PACI) புதிய சேவை அறிமுகம்..!!

PACI launches new services on e-envelop; More than 200,000 civil IDs delivered
PACI launches new services on e-envelop; More than 200,000 civil IDs delivered. (image credit : IIK)

குவைத் சிவில் தகவலுக்கானபொது ஆணையம் புதிதாக e envelope சேவையை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் சிவில் தகவல் பொது ஆணையம் (PACI) அதன் மின்னணு உறை (e envelope service) சேவையில் குடிமக்களுக்கும் குடியிருப்பாளர்களுக்கும் வசதியாக புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் அரசுத் துறையில் உள்ள வெளிநாட்டினர்களின் 1,183 வேலைவாய்ப்பு ஒப்பந்தங்கள் முடக்கம்..!!

இந்த புதிய சேவைகளில் புதிதாகப் பிறந்த குழந்தையின் முதல் முறையாக பதிவு செய்தல், குடும்ப உறுப்பினர்களை முதன்முறையாக பதிவு செய்தல், வீட்டு வேலைக்காரர் சேவைக்கு பதிவு செய்தல் போன்றவை இதன் மூலம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான இணையதளம் e-envelope.paci.gov.kw என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் சேவையை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் பேமிலி விசாவை தனியார் துறைக்கு மாற்றுவதற்கு தடை; வெளிநாட்டவர்கள் வருத்தம்..!!

இதற்கிடையில், சிவில் ஐடியை புதுப்பித்தவர்களின் 200,000 க்கும் மேற்பட்ட அடையாள அட்டைகளை மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பிஏசிஐ நிறைவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

PACI தற்போது மே மாதம் வழங்கப்பட்ட அட்டைகளை விநியோகிக்க தயாராகி வருவதாகவும், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இயந்திர எண் தெரிந்தால் சந்திப்பு இல்லாமல் கூட சிவில் ஐடியை சேகரிக்க முடியும் என்று PACI தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்திற்கு உள்வரும் பயணிகளுக்கான PCR சோதனை சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் அதிகரிப்பு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms