குவைத்தின் PACI வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் கிடைக்கும் அதன் சேவைகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது..!!

PACI announces the list of services available from Sunday . (photo : IIK)

குவைத்தின் சிவில் தகவல் பொது ஆணையம் (PACI) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) முதல் ஆன்லைனில் கிடைக்கும் அதன் சேவைகளின் பட்டியலை அறிவித்துள்ளது.

பட்டியலின் படி, குவைத் மற்றும் குவைத் அல்லாதவர்களுக்கான தனிப்பட்ட புகைப்படத்தைப் புதுப்பிக்கவும், குவைத் மற்றும் குவைத் அல்லாதவர்களுக்கு புதிதாகப் பிறந்த குழந்தைக்கான பிறப்பு பதிவு, வீட்டுப் பணியாளருக்கான முதல் முறை பதிவு (article 20), குடும்ப சேர்க்கை (article 22), அனைவருக்கும் முதல் முறையாக பதிவு செய்தல் பிரிவு 17, 18, 19, 23 மற்றும் 24 இன் கீழ் உள்ள சேவைகள் தற்போது ஆன்லைனில் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பிற சேவைகள் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் அதன் வலைத்தளத்தின் மூலம் அப்பாய்ண்ட்மெண்டை பதிவு செய்ய வேண்டும் என்று தெரியவிக்கப்பட்டுள்ளது.

இந்த சேவைகளில் பிறந்த தேதி மாற்றம் / திருத்தம், பயண ஆவணத்தை பதிவு செய்தல் / ரத்து செய்தல், சான்றிதழ்கள் அச்சிடுதல், கட்டிட பதிவு, நபரை செயல்படுத்துதல் (குவைத்தில் பிறந்தவர்), திருத்தம் / குடியிருப்பை ரத்து செய்தல், ஒரு புகைப்படத்தைச் சேர்க்கவும் (குழந்தை 5 வயது) மற்றும் சட்டவிரோதமான குடியிருப்பாளர்கள் பரிவர்த்தனை போன்ற சேவைகள் அடங்கும்.

PACI தலைமை அலுவலகங்களில் சிவில் அடையாள அட்டை சேகரிப்பு குவைத் அல்லாதவர்களுக்கான தெற்கு சுர்ரா (அட்டை மாற்றுதல், புதிதாகப் பிறந்தவர், முதல் முறை விண்ணப்பதாரர்) காலை 9:00 மணி முதல் பிற்பகல் 1:00 மணி வரை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08