குவைத்தில் தற்காலிக குடியிருப்பை மாற்றவும் புதுப்பிக்கவும் ஆன்லைன் சேவை..!!

Online service activated to transfer and renew temporary residence. (photo : IIK)

குவைத்தில் உள்துறை அமைச்சகம் ஒரு புதிய ஆன்லைன் சேவையைத் தொடங்கியுள்ளது, இதன் மூலம் தற்காலிக குடியிருப்பு (Article 14) உள்ள ஒரு வெளிநாட்டவர் தனது குடியிருப்பை வழக்கமான (Residence) குடியிருப்பாக மாற்ற முடியும் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக, காலாவதியான குடியிருப்பு அனுமதி பெற்ற அனைவருக்கும் ஆகஸ்ட் 31 வரை அமைச்சகம் தானாகவே தற்காலிக குடியிருப்பை வழங்கியது.

ஆதாரங்களின்படி, குடியிருப்பு புதுப்பித்தலுக்காக அலுவலகங்கள் மூடப்பட்டபோது சுமார் 350 ஆயிரம் பேருக்கு தற்காலிக குடியுப்புகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தற்போது, புதிய சேவையின்படி, உள்துறை அமைச்சக வலைத்தளமான www.moi.gov.kw இல் உள்நுழைந்து ஆன்லைனில் தேவையான நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி தங்களது தற்காலிக குடியிருப்பை பழைய வகை குடியிருப்பாக மாற்றலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08