குவைத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Dr. Buthaina Al-Mudhaf in press conference. (photo : Arab Times)

சுகாதார அமைச்சகத்தின் பொது சுகாதார விவகாரங்களுக்கான உதவி துணை செயலாளர் Dr. Buthaina Al-Mudhaf அவர்கள் ஈரானில் இருந்து வந்த ஒருவரால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா வைரஸால் (COVID-19) பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

குவைத்தில் தற்போது மொத்தமாக கொரோனா வைரஸால் (COVID-19) 46 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 46 நபர்களும் நிலையான நிலையில் உள்ளனர் மற்றும் அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள் என்று அவர் மேலும் கூறினார்.

கூட்டம் நிறைந்த மற்றும் நெரிசலான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு மக்களுக்கு அவர் வலியுறுத்தினார்.

source : Arab Times