குவைத் உள்ளிட்ட நாடுகளில் அமைதியான சூழல் நிலவுவதால் அச்சப்படத் தேவையில்லை…!

இந்தியாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும், மாற்று எரிசக்தி தீர்வுகளை கண்டுபிடிப்பதற்கும், அரசு முயற்சி எடுத்து வருவதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.

இதுகுறித்து, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எண்ணெய் உற்பத்தி  நாடுகளில் நிலவும் பதற்றம் இந்தியாவை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதியில்  அமைதியான சூழல் நிலவுவதால், அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியுள்ளார்.