குவைத்தில் கொரோனா அவசர அமைச்சரவை குழுவின் ஒப்புதல் இல்லாமல் புதிய விசா வழங்கப்படாது..!!

No new visa without the approval of Corona Emergency Ministerial committee
No new visa without the approval of Corona Emergency Ministerial committee. (image credit : IIK)

குவைத்தில் அனைத்து விதமான நுழைவு விசாக்களும் கொரோனா அவசர அமைச்சரவை குழுவின் ஒப்புதல் இல்லாமல் வழங்கப்படாது என்று அமைச்சரவை நேற்று (ஆகஸ்ட் 13) அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அவசர அமைச்சரவை குழுவின் ஒப்புதல் இல்லாமல் எந்தவொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கும் குவைத்துக்கான அனைத்து வகையான நுழைவு விசாக்களும் வழங்கப்படாது என்று அமைச்சரவை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் இயல்பு நிலைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் நான்காம் கட்டம் தொடங்குவதற்கான தேதி அறிவிப்பு..!!

குவைத் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர், தாரிக் அல்-முஸ்ரிம் கூறுகையில், கொரோனா அவசர அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு தவிர, எந்தவொரு நாட்டை சேர்ந்தவர்களுக்கும் நுழைவு விசாக்கள் வழங்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்த சபை முடிவு செய்தது என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயதடைந்துவர்கள் மற்றும் பல்கலைக்கழக பட்டம் இல்லாதவர்கள் கவனத்திற்கு..!!

குவைத், ஆகஸ்ட் 18 செவ்வாய்க்கிழமை அன்று முதல் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான நான்காவது கட்டத்திற்கு செல்ல அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இரவு 9:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை உள்ள பகுதிநேர ஊரடங்கு உத்தரவு தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்திலிருந்து தமிழகம் வரவிற்கும் விமானங்களின் அட்டவனை வெளியீடு..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms