குவைத் மின் நிலையத்தில் தீ விபத்து; அதிஷ்டவசமாக உயிரிழப்புகள் தவிர்ப்பு..!!

No injuries among staff in power plant fire at kuwait. (photo : Kuwait Times)

சுலைபியா மின் நிலையத்தின் ஒரு பகுதியில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று மின்சார மற்றும் நீர் அமைச்சகத்தின் (MEW) தலைவர் துயேஜ் கலீஃபா அல்-அஸ்மி அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து MEW நிலையத்திலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகரித்து ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

சுலைபியா AW ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் நேற்று அதிகாலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது பின்னர் சுலைபியாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்குவதாக MEW அறிவித்தது.

மொத்தமாக 210 மெகாவாட் மின்சாரத்தை இழந்ததாகவும் அதில் 177 மெகாவாட் மீட்கப்பட்டதாகவும், விரைவில் முழு திறனை மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் MEW தெரிவித்துள்ளது.

source : Kuwait Times