குவைத்தில் பள்ளிகள் திறக்கும் வரை எந்த தேர்வும் இல்லை – கல்வி அமைச்சகம்

No exams until schools open to students
No exams until schools open to students. (Photo : TimesKuwait)

குவைத்தில் 2020-2021 கல்வி ஆண்டின் அனைத்து வகையான தேர்வுகளையும் இடைநிறுத்தம் செய்யவதாக கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து கல்வி வகுப்புகளுக்கும் மாணவர்கள் உடல் ரீதியாக பள்ளிகளில் சென்று படிக்கும் வரை அனைத்து வகையான தேர்வுகளையும் இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

ஆதாரத்தை மேற்கோள்காட்டி பொது கல்வி துறை கூறுகையில், பொது பயிற்றுநர்களை இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான மதிப்பீட்டு பொறிமுறை குறித்த திட்டங்களைத் தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இது பெரும்பாலும் வருகை, பங்கேற்பு, கடமைகள் மற்றும் அறிக்கைகளுக்கு தலா 25 சதவீதம் என்ற விகிதத்தில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

மழலையர் பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு எந்த மதிப்பீடும் இருக்காது என்று கலவி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், அவர்களின் வகுப்புகள் குவைத் டிவியில் மாலையில் காண்பிக்கப்படும் என்றும், இது தொலைக்காட்சி பாடங்கள் வடிவில் இருக்கும் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook

? Twitter