34 நாடுகள் தடை மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட காலத்தில் எந்த மாற்றமும் இல்லை..!!

No change expected on 34 country ban and quarantine period
No change expected on 34 country ban and quarantine period. (Photo : TimesKuwait)

குவைத்தில் இன்று (செப்டம்பர் 22) செவ்வாய்க்கிழமை அன்று அமைச்சர்கள் கவுன்சில் அதன் வழக்கமான கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இந்த கூட்டத்தில் முக்கியமாக குவைத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் குறித்தும், குவைத்திற்கு வருகை தரும் பயணிகளின் தனிமைப்படுத்தல் நாட்களை குறைப்பது பற்றியும் மதிப்பாய்வு செய்வதாக அறிவிக்கப்பட்டுருந்தது.

இதையும் படிங்க : COVID-19 க்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட ஜப்பானிய மருத்துவம் குவைத்தில் வெற்றி..!!

இந்நிலையில், குவைத்திற்குள் நுழைய தடைசெய்யப்பட்ட 34 நாடுகளின் பட்டியலை மாற்றவோ அல்லது குறைக்கவோ புதிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தது.

மேலும், குவைத்திற்கு வருகை தரும் பயணிகளின் தனிமைப்படுத்தல் நாட்களை குறைப்பது பற்றிய முன்மொழிவு குறித்தும் எந்த முடிவும் எடுக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத் மனிதவள ஆணையம் 60 வயதுக்கு மேற்பட்ட 68,318 வெளிநாட்டினரின் பட்டியலைத் தயாரித்துள்ளது..!!

தற்போது, குவைத்திற்குள் நுழைய தடைசெய்யப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 34 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், உள்வரும் பயணிகளின் தனிமைப்படுத்தல் காலம் 14 நாட்கள் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : அரபு நாடுகளின் சாலை தரப் பட்டியலில் குவைத் 6 வது இடத்திற்கு முன்னேற்றம்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter