வெளிநாடுகளில் மரணமடையும் இந்தியர்களின் உடல்கள் தாயகம் கொண்டுவருவதிலிருந்த தடையை மத்திய அரசு நீக்கம்..!

No ban to Bring deadbodies of indians from overseas.

சமீபத்திய புதிய அறிவிப்பின் அடிப்படையில் தற்போதுள்ள சூழ்நிலையில், இந்திய வெளியுறவு மற்றும் சுகாதாரத்துறையின் ஒப்புதல் பெற்று கொரோனா தவிர்த்து மற்ற காரணங்களால் மரணமடையும் இந்தியர்களின் உடல்கள் கொண்டுவருவதில் எந்த பிரச்சினையும் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக அரசினால் வரையறை செய்து உருவாக்கப்பட்ட விதிமுறைகளை கடைபிடிக்கப்படுகிறது என்பதையும் உறுதிபடுத்த வேண்டும் என்றும் வெளியுறவுத் துறையின் புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்த உடல்கள் எம்பாமிங் செய்யும் நேரத்தில், கொரோனா நோய்தொற்று இல்லை என்பதையும் உறுதிபடுத்த வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், இதை உறுதிப்படுத்த இந்திய தூதரகத்தின் NOC சான்றிதழ் தேவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.