குவைத்தில் கொரோனா வைரஸால் மேலும் மூன்று பேர் பாதிப்பு..!!

Covid 19; new 5 cases recovered in kuwait.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இதுவரை 72ஆக உயர்ந்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள மூவரில் ஒருவர் ஈரான், மற்றொருவர் எகிப்து மற்றும் சூடான் ஆகிய நாட்டிற்கு சென்றதன் மூலம் பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூகக் கூட்டங்களை தவிர்க்கவும் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

source : Arab Times