குவைத்திற்கான புதிய இந்திய தூதராக IFS அதிகாரி சி.பி.ஜார்ஜ் அவர்கள் நியமனம்..!!

Mr. Sibi George to take charge as Indian Ambassador in Kuwait. (photo : IIK)

குவைத்தின் புதிய இந்திய தூதராக IFS அதிகாரி சி.பி.ஜார்ஜ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டது.

தற்போதைய குவைத் இந்திய தூதரக அதிகாரி கே.ஜீவாசாகர் கடந்த வாரம் ஓய்வு பெற, பதவிக்கு இவர் நியமனம் செய்யபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தூதுவர் சி.பி.ஜார்ஜ் இந்திய வெளியுறவு சேவையின் 1993 வருட தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரது முதல் பணி எகிப்தில் ஒரு அதிகாரியாக இருந்தார், தொடர்ந்து கத்தாரில் முதல் செயலாளராகவும், பாகிஸ்தானில் உள்ள இந்திய Indian High Commission-ல்
அரசியல் ஆலோசகராகவும், பின்னர் அமெரிக்காவில் Political Counsellor ஆலோசகராகவும் பணியாற்றினார். தொடர்ந்து சவுதி அரேபியா மற்றும் ஈரானில் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

இதை தவிர டெல்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக தலைமையகத்தில் கிழக்கு-ஆசியா பிரிவு மற்றும் இந்தோ-ஆப்பிரிக்கா அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தார்.அரபு மொழியில் நிபுணத்துவம் பெற்ற சி.பி.ஜார்ஜுக்கு 2014 ஆம் ஆண்டில் IFS-ல் சிறந்து விளங்குவதற்கான எஸ்.கே.சிங் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.