குவைத் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் – MoH

MoH calls on citizens and residents not to travel abroad. (photo : IIK)

COVID-19 நோய்த்தொற்று மிக வேகமாக பரவிவரும் காரணத்தால், தற்போது வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டாம் என்று சுகாதார அமைச்சகம் நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 10) குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளில் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்ட போதிலும், நோய்த்தொற்று பரவுவது உலகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது.

“பயணத்தின் போது வைரஸ் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிப்பதில் இருந்து உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க பயணிக்க வேண்டாம் என்று அமைச்சகம் அறிவுறுத்துகிறது” என்று MoH ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08