குவைத்தில் கல்வி கட்டணத்தை 25% குறைக்க MoE சுற்றறிக்கை வெளியீடு..!!

MoE issue circular to reduce tuition fee by 25%. (image credit : MENAFN)

குவைத் கல்வி அமைச்சரும் உயர்கல்வி அமைச்சருமான Dr Saud Al-Harbi அவர்கள் 2021/2020 கல்வியாண்டிற்கான கல்வி கட்டணம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளார்.

Dr Saud Al-Harbi அவர்கள் 2021/2020 கல்வியாண்டிற்கான கல்விக் கட்டணத்தை 2021 கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து 25 சதவீதம் குறைப்பதன் மூலம் மறுசீரமைக்க அமைச்சரவை முடிவை வெளியிட்டார்.

இதையும் படிங்க : குவைத் விமான நிலையத்தில் பயணிகளுக்கு உதவ DGCA புதிய பயன்பாட்டு (Application) அறிமுகம்..!!

குவைத்தில் கொரோனா வைரஸின் காரணமாக பலர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வருகின்றனர், மேலும், பலர் தனது வேலைகளை இழந்து கஷ்டத்தில் உள்ளனர்.

இதுபோன்ற கஷ்ட சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு கல்வி கட்டணத்தை 25 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட மறுக்கும் பெற்றோர்களுக்கு அபராதம் மற்றும் சிறை..!!

2021/2020 கல்வியாண்டின் தொடக்கத்தில் இருந்து மெய்நிகர் (virtual) வகுப்புகள் மற்றும் பிற அனைத்து கற்றல் வளங்களையும் உள்ளடக்கிய ஆன்லைன் கல்வி தளங்களை செயல்படுத்த அனைத்து கல்வி முறைகளின் தனியார் பள்ளிகளின் அவசியத்தை Dr Saud Al-Harbi வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் பள்ளிகளுக்குத் திரும்ப அனுமதிக்கும் வரை ஆன்லைன் வகுப்புகள் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் ஷாப்பிங் மால்களின் வேலை நேரங்கள் இன்று முதல் மாற்றம்..!!

 

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms