குவைத்தில் தொலைந்த நாய் குட்டியை கண்டுபிடித்தவற்கு 500 தினார் சன்மானம்..!

Missing dog found Owner rewarded 500 KD to informer.

குவைத் நாட்டில் காணாமல் போன தனது நாய்குட்டியை கண்டுபிடித்து கொடுத்தவற்கு நாய் உரிமையாளர் 500 தினார்கள் சன்மானமாக வழங்கியுள்ளார்.

குவைத்தில் ஒருவருடைய நாய்க்குட்டி கடந்த வெள்ளிக்கிழமை காணமல் போன நிலையில் அதன் உரிமையாளர்கள் பல இடங்களில் தேடியும் நாய்க்குட்டி கிடைக்கவில்லை.

இதனையடுத்து, உரிமையாளர் விளம்பரம் ஒன்றை வெளியிட்டார் அதில் தன்னுடைய நாய்க்குட்டியை கண்டுபிடிக்க உதவும் நபருக்கு 500 தினார்கள் சன்மானமாக வழங்கபடும் என்று சமூக வலைதளங்களில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், எகிப்து கட்டிடத் தொழிலாளி ஒருவர் நேற்று தன்னுடைய பணியை முடித்துவிட்டு திரும்பியபோது Fahaheel Express சாலையில் காணமல் போன நாய்க்குட்டியை கண்டுபிடித்துள்ளர்.

இதையடுத்து, அவர் நாயின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து விரைவாக அந்த இடத்திற்கு வந்த உரிமையாளர் நாய்க்குட்டியை பெற்றுக்கொண்டு அவருக்கு நன்றியை தெரிவித்து பின்னர் அந்த தொழிலாளியிடம் அவர் அறிவித்திருந்த 500 தினார் சன்மானமும் வழங்கினார்.

இதுகுறித்து அந்த தொழிலாளி கூறுகையில், இதில் 100 தினார்கள் தான் எடுத்துக்கொண்டு மீதி பணத்தை தன்னுடைய அறையில் உள்ள நண்பர்களுக்கு பகிர்ந்து அளிப்பேன் என்று கூறினார்.