குவைத்தில் அரசுத்துறை சார்ந்த ஊழியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளங்கள் டெபாசிட் செய்யும் பணி தொடக்கம்..!!

May salaries for govt sector ready in kuwait. (photo : Arab Times)

குவைத்தில் உள்ளூர் வங்கிகள் மே மாதத்திற்கான சம்பளம் மற்றும் நிதி சலுகைகளை அரசுத் துறை ஊழியர்களின் கணக்குகளில் டெபாசிட் செய்யத் தொடங்கியுள்ளன.

அரசு நிறுவனங்களிடமிருந்து சம்பள அறிக்கைகளைப் பெற்ற உடனேயே, வங்கிகள் சம்பளத்தை டெபாசிட் செய்ய கடுமையாக உழைத்து வருவதாக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன, அதாவது இந்த துறையில் உள்ள அனைத்து ஊழியர்களின் சம்பளமும் இந்த வாரத்திற்குள் (ஈத் அல்-பித்ர் விடுமுறைக்கு முன்பு) டெபாசிட் வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டதாரிகளுக்கான சமூக கொடுப்பனவுகளையும் (Social allowance) வங்கிகள் டெபாசிட் செய்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.

இதற்கிடையில், குவைத் கடன் வங்கி (KCB) தவணை வசூலை ஒத்திவைக்கும் முடிவு வங்கியில் கடன் பெற்றவர்களை மட்டுமே உள்ளடக்கியது என்று பொதுப்பணி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் Dr. ராணா அல்-ஃபரிஸ் தெளிவுபடுத்தினார்.

ஒத்திவைக்கப்பட்ட மாதத் தவணைகள் அதிகரிக்காது என்பதற்கான முடிவு உத்தரவாதத்தை அவர் உறுதிப்படுத்தினார், இது KCB-இலிருந்து பெறப்பட்ட அனைத்து வகையான கடன்களுக்கும் பொருந்தும்.

சுமார் 150,000 குடிமக்கள் இந்த முடிவிலிருந்து பயனடைவார்கள் என்றும், ஒத்திவைக்கப்பட்ட தவணைகளின் மொத்த தொகை 100 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.