குவைத்தில் வாடிக்கையாளர்களுக்கு கூப்பன்கள் வழங்குவதாக வாட்ஸ்அப்பில் பரவிய செய்திகளை லுலு ஹைப்பர் மார்க்கெட் மறுத்துதுள்ளது..!!

LuLu Hypermarket denies news of coupons to customers. (photo : TimesKuwait)

குவைத் நாட்டின் முன்னணி மால்களில் லுலு (LULU) ஹைப்பர் மார்க்கெட் ஒன்றாகும்.

வைரஸ் தொற்றுநோய்களின் போது லுலு ஹைப்பர் மார்க்கெட் 150 KD மதிப்புள்ள கூப்பன்களை வழங்குவதாகக் வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் ஒரு செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளது.

மேலும், இந்த செய்தி போலியானது மற்றும் எந்த வகையிலும் லுலு ஹைப்பர் மார்க்கெட்டுடன் தொடர்புபடுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.

எந்தவோர் செய்தி மற்றும் தகவல்களை அதன் அதிகாரப்பூர்வ சேனல்களில் மட்டுமே அறிவிக்கப்படும் என்று தெரிவித்துக்கொண்டது.

எனவே, இந்த செய்தியை புறக்கணிக்குமாறும் மற்றும் பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டது.