குவைத்தில் முழு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது; பகுதிநேர ஊரடங்கு அமல்..!!

Lock-down in Jleeb, Farwaniya, Mahboula, Khaitan and Hawalli; 6 pm to 6 am curfew in other places. (photo : gulf business)

குவைத்தில் தற்போதுள்ள முழு ஊரடங்கு உத்தரவு தளர்த்த முடிவு, புதிய அறிவிப்பு அடிப்படையில் ஊரடங்கு உத்தரவு மாலை 6:00 மணி முதல் காலை 6:00 மணி வரை பகுதிநேர ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் Jaleeb Al Shuyoukh மற்றும் Mahboola ஆகிய இடங்களுக்கு அடுத்த படியாக Farwaniya, Khaitan, Nugra, Hawally மற்றும் Maidan Hawally பகுதிகள் ஆகிய இடங்களில் முழு ஊரடங்கு உத்தரவு முதல்கட்டமாக 3 வாரங்களுக்கு நடைமுறையில் கொண்டுவர முடியும் செய்யபட்டுள்ளது.

ரெஸ்டாரன்ட்கள், கபேக்களில் உணவுப் பொருட்கள் வெளியே எடுத்து செல்லவும் (TAKE AWAY), மற்றும் வீட்டு டெலிவரிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கார் ஷோரூம், வாகன உதிரி பாகங்கள் கடைகள், கேரேஜ்கள், கார் கழுவும் நிலையங்கள் மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இவை அனைத்தும் மே 31 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை தவிர சுகாதாரத் துறையினர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பின்னர் மசூதிகள் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் தங்கள் தொழுகை மற்றும் பிரார்த்தனை உள்ளிட்டவை நிறைவேற்ற கடுமையான காட்டுபடுகளுடன் அனுமதி வழங்கபடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தில் உள்ள அனைத்து துறைகளும் மற்றும் மக்களின் அன்றாட வாழ்கையில உள்ள அனைத்து சேவைகளும் படிப்படியாக ஐந்து கட்டங்களாக இயல்பு நிலைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அது குறித்த அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.