உலகளாவிய கொரோனா வைரஸின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் புதுப்பிக்கப்படும்..!!

List of travel ban countries may change continuously, govt spokesman. (image credit : IIK)

குவைத் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முசாராம் அவர்கள், எந்தவொரு நாட்டிலிருந்தும் குவைத்துக்கு வருபவர்களுக்கு PCR சான்றிதழை வழங்குவதில் விதிவிலக்கு இல்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இது சுகாதாரத் தேவைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்கு ஏற்ப கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் சில நாடுகள் சேர்ப்பு..!!

சில நாடுகளுக்கு வணிக விமான போக்குவரத்துக்கான தடை, அரசாங்க நிறுவனங்களின் தொடர்ச்சியான மதிப்புரைகளுக்கு உட்பட்டது என்றும், உலகளாவிய கொரோனா வைரஸின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப அவ்வப்போது பட்டியல் புதுப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மிகவும் கட்டாய மற்றும் தீவிர நிகழ்வுகளைத் தவிர்த்து அனைவரும் தங்கள் பயணத் திட்டத்திற்காக காத்திருக்கவும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதையும் படிங்க : குவைத்திற்குள் நுழைய இந்தியர்களுக்குத் தடை; வேலையிழக்கும் ஆபத்து..!!

முதலில் பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களைத் தவிர, நாட்டிலுள்ள குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்களை குவைத்துக்குச் செல்லவும், வெளியேறவும் அமைச்சர்கள் கவுன்சில் முடிவு செய்துள்ளதாக அரசு தொடர்பு மையம் தெரிவித்திருந்தது.

இதையும் படிங்க : குவைத்தில் குழந்தை விசாவை அம்மாவின் ஸ்பான்சர்ஷிப்பிற்கு மாற்றுவதற்கு தடை..!!

பின்னர், இந்தியா, ஈரான், சீனா, பிரேசில், கொலம்பியா, ஆர்மீனியா, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், சிரியா, ஸ்பெயின், சிங்கப்பூர், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, இலங்கை, நேபாளம், ஈராக், மெக்சிகோ, இந்தோனேசியா, சிலி , பாகிஸ்தான், எகிப்து, லெபனான், ஹாங்காங், இத்தாலி, வடக்கு மாசிடோனியா, மால்டோவா, பனாமா, பெரு, செர்பியா, மாண்டினீக்ரோ, டொமினிகன் குடியரசு மற்றும் கொசோவ் என 31 நாடுகளுக்கு தடை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms