குவைத்தின் நிதி நிலைமை சிறந்த நிலையில் உள்ளது; பொருளாதாரத்தில் மாற்றங்கள் தேவை – குவைத் பிரதமர்

Kuwait's financial situation excellent, economy needs changes, says PM. (photo : IIK)

குவைத்தின் நிதி நிலைமை சிறந்த நிலையில் இருப்பதாக புதன்கிழமை (ஜூன் 3) அன்று பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபா அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும், பொருளாதார கட்டமைப்பில் ஒரு பெரிய மாற்றம் தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஒரு குறிப்பிட்ட வருமானத்தை, அதாவது எண்ணையில் வரும் வருமானத்தை மட்டும் நம்பி இருக்க இயலாது, மேலும் நாட்டின் வருமான ஆதாரங்களை நாம் பன்முகப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

கொரோனா வைரஸின் விளைவுகள் 65 அமெரிக்க டாலரிலிருந்து 11 அமெரிக்க டாலர் வரை எண்ணெய் விலையில் பெரும் சரிவை ஏற்படுத்தின, மேலும் குவைத் அதன் பணம் மற்றும் இலாகாக்கள் (portfolios) அனைத்தையும் உலக சந்தைகளில் முதலீடு செய்து வந்தது, ஆனால் எந்தவொரு நெருக்கடியையும் சமாளிக்கத் திட்டமிட்டதன் விளைவாக எந்தவொரு மோசமான நிதி நிலைமையும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.