குவைத்தில் முதல் முறையாக ஜூலை மாதத்தில் திருமணங்களை விட விவாகரத்து விகிதங்கள் அதிகமாக பதிவு..!!

Kuwait’s divorce rate rises as consequence of lockdown. (image credit : TimesKuwait)

குவைத்தில் விவாகரத்து விகிதம் ஜூலை மாதத்தில் முதல் முறையாக திருமணங்களை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : 31 நாடுகளுக்கு தடை விதித்ததன் எதிரொலி; குவைத் கல்வி அமைச்சகத்திற்கு புதிய நெருக்கடி..!!

ஜூலை மாதத்தில் மொத்தமாக 622 திருமணங்களுடன் ஒப்பிடும்போது 818 விவாகரத்துக்கள் இருந்துள்ளதாகவும் சட்ட ஆவணங்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, அல்-சாயாஸா தினசரி தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலின் காரணமாக நாட்டில் ஊரடங்கு அமலில் இருந்ததால், அப்போது ஏற்படும் திருமண பிரச்சினைகள் காரணமாக விவாகரத்து விகிதங்கள் அதிகரிப்பது காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையும் படிங்க : குவைத்தில் வணிக விமானங்களின் சேவை தொடங்கிய முதல் நாளே 10,000க்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் ரத்து..!!

மேலும், பல காரணங்களில் வேலைகள் மற்றும் வணிகம் இழந்ததால் பல குடும்பங்கள் எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகளாலும், அதே சமயம் தம்பதிகளிடையே வழக்கமான வாதங்கள் திருமண முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : உலகளாவிய கொரோனா வைரஸின் முன்னேற்றங்களுக்கு ஏற்ப தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் புதுப்பிக்கப்படும்..!!

விவாகரத்து அதிக விகிதங்கள் மற்றும் திருமண வழக்குகள் குறைதல் ஆகியவை கொரோனா வைரஸ் பரவலால் ஏற்படும் நாட்டில் விதிவிலக்கான நிலைமைகளின் விளைவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms