உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசையில் குவைத் பாஸ்போர்ட் முன்னேற்றம்..!!

Kuwaiti passport ranking improves.
Kuwaiti passport ranking improves. (image credit ; Arab Times)

பாஸ்போர்ட் மதிப்பீடு 2020 ஆம் ஆண்டிற்கான பதிப்பில் குவைத் பாஸ்போர்ட்ன் மதிப்பு கடத்த ஆண்டை விட அதிகமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாஸ்போர்ட் மதிப்பீட்டின் பதிப்பில் குவைத் பாஸ்போர்ட் உலகளவில் 39 வது இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்களுக்கு வேலை அனுமதி வழங்கப்படாது..!!

தற்போது, இந்த 2020 ஆம் ஆண்டிற்கான பதிப்பில் குவைத் பாஸ்போர்ட் உலகளவில் 33 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது, இதனால் வளைகுடா மற்றும் அரபு நாடுகளின் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய ஆண்டின் தரவரிசையில் இருந்து வேறு சில நாடுகளுக்கான பாஸ்போர்ட் புள்ளிகளின் சரிவு ஏற்பட்டுள்ளதால் குவைத் முன்னேறி இரண்டாம் இடத்தை பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தின் இந்திய தூதராக சிபி ஜார்ஜ் பொறுப்பேற்றார்..!!

குவைத் பாஸ்போர்ட் “இயக்க புள்ளிகளின் சுதந்திரம்” அளவில் 68 புள்ளிகளைப் பெற்றது, இது குவைத் பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர்கள் முன்கூட்டியே விசா பெறாமல் 33 நாடுகளுக்கு பயணிக்க அனுமதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் அரபு நாடுகளின் பாஸ்போர்ட் மதிப்பு பட்டியலில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இந்தியா உட்பட 31 நாடுகளுக்கான தடையை நீக்க குவைத் பரிசீலனை..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms