COVID-19; குவைத்தில் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி..!!

Kuwaiti female police officer contracts coronavirus.

குவைத்தில் ஒரு பெண் காவல்துறை அதிகாரி கொரோனா வைரஸால் (COVID-19) பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக குவைத்தின் உள்துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை (மே 10) தெரிவித்துள்ளது.

அந்த அதிகாரி, அவரது குடும்பத்தினர் மற்றும் உடன் பணிபுரிபவர்கள் ஆகியோர்கள் உடல்நிலைகளை சரிபார்க்க மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதாக அமைச்சகத்தின் மக்கள் தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஊடகத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சீருடையில் உள்ள பெண் காவலர்களின் சோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைச்சாலையில் உள்ள அனைத்து பெண் கைதிகளும் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளின்படி, ஒரு விரிவான மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட வழக்கமான சுகாதார நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.