குவைத்தில் விபத்திற்குள்ளான நபர் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்..!!

Kuwaiti escapes death in cemetery. (Image credit :Arab Times)

அடையாளம் தெரியாத இறந்த நபரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க செல்லும் வழியில் சுலைபிகாட் கல்லறைக்குள் வாகனம் கவிழ்ந்தது, இதில் அதிஷ்டவசமாக குவைத்தை சேர்ந்த அவர் உயிர் தப்பினார்.

விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையில், அஹ்மதி கவர்னரேட்டில் ஒரு கட்டிடத்தின் கூரையில் இருந்து கீழே விழுந்து 27 வயது எகிப்திய கட்டுமான தொழிலாளி இறந்துவிட்டார்.

பாதுகாப்பு வட்டாரத்தின் தகவலின்படி, பாதிக்கப்பட்டவர் அதான் மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்துள்ளார், ஆனால் அவர் காயத்திற்குள்ளானதால் அவரால் முடியவில்லை என்று கூறியுள்ளது.

Source : Arab Times