குவைத்தில் தாயை கொல்ல முயன்ற மகன் கைது..!!

Kuwait witch kill mother
Photo Credit : TimesKuwait

குவைத்தில் தனது தாயை கத்தியால் கொல்ல முயன்ற இளைஞரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, பாதுகாப்பு அதிகாரிகள் கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை கட்டுப்படுத்தி மற்றும் கத்தியைக் கைவிடுமாறு சமாதானப்படுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க : சவுதி அரேபியாவுக்கான விமானங்களை மீண்டும் தொடங்கவுள்ளதாக குவைத் ஏர்வேஸ் அறிவிப்பு..!!

இந்த கொலை முயற்சி ஹவாலி கவர்னரேட்டின் அல் சல்மியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நிகழ்ந்துள்ளது.

காவல்துறை விசாரணையில், தனது தாயார் சூனியம் செய்வது போன்று கனவு கண்டதால் கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

விசாரணையில், இவர் குவைத் உள்துறை அமைச்சகத்தின் முன்னாள் காவலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூனியம் செய்வதைத் தடுக்க தனது தாயைக் கொல்ல முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

தனது மகன் ஒரு புனர்வாழ்வு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது மகன் மீது வழக்குப்பதிவு செய்ய மறுத்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter