இன்றைய வானிலை நிலவரம் குறித்த அறிக்கையை குவைத் வானிலை ஆய்வு மையம் வெளியீடு…

Kuwait weather update
Photo Credit : IIK

குவைத் வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 16) திங்கள்கிழமை வானிலை நிலவரம் குறித்த ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கையில், வானிலை ஓரளவு மேகமூட்டமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மேலும், இது படிப்படியாக உயர வாய்ப்புள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு காற்றின் வேகம் மணிக்கு 12 முதல் 40 கி.மீ வரை வரையில் இருக்கும்.

மேலும், சிறிய அளவிலான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.

இரவு நேரங்களை பொறுத்தவரை, வானிலை குளிர்ந்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காற்று வடகிழக்கு திசையில் மிதமானதாக இருக்கும் என்றும், மணிக்கு 12 முதல் 35 கிமீ வரையிலான வேகத்தில் இருக்கும்.

மேலும், சில பகுதிகளில் மூடுபனி உருவாகும் வாய்ப்பும், சில இடங்களில் உயர் மேகங்க மூட்டங்கள் தோன்றும்.

பகலில் எதிர்பார்க்கப்படும் வெப்பநிலை 27 டிகிரி என்றும், இது இரவில் 16 டிகிரியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter