குவைத்தில் நிலையற்ற வானிலை; குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு எச்சரிக்கை..!!

Kuwait unstable weather
Photo credit : Times Kuwait

குவைத்தில் நிலையற்ற மற்றும் மோசமான வானிலை கடந்த சில நாட்களாக நிலவி வருகிறது.

இது போன்ற காலங்களில் குடிமக்களும் வெளிநாட்டவர்களும் கவனமாகவும் விழிப்புடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக தீயணைப்புத் துறை நேற்று (நவம்பர் 10) செவ்வாயன்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் கொரோனா காலகட்டத்தில் பணிப்பெண்களை துன்புறுத்துதல் அதிகரிப்பு..!!

மேலும் செய்திக்குறிப்பில், அவசரகால மற்றும் மனிதாபிமான சூழிநிலை ஏற்பட்டால் புகாரளிக்க தயங்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளுக்கு புகாரளிக்க அவசர தொலைபேசி எண் 112 ஐ அழைக்க தயங்க வேண்டாம் என்று தீயணைப்புத் துறையின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத் துறை மக்களை வலியுறுத்தியது.

நேற்று முதல், குறைந்த மற்றும் நடுத்தர மேகங்களின் பரவலால், சில மேகங்களுடன் குவைத் வானிலை பாதிக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் முன்னர் அறிவித்தது.

இது அவ்வப்போது மழை, சில நேரங்களில் இடியுடன் கூடிய மழை, குறிப்பாக வடக்கு பகுதிகளில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு கட்டுப்படாதவர்களுக்கு உடனடியாக கைது..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter